தமிழ் திரையுலகின் சீனியர் நடிகர்களில் உலக நாயகன் கமலும் ஒருவர். இவர் தற்போது பாபநாசம் படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.ஒரு மாதத்துக்கு முன்பு, 'உத்தம வில்லன்' படப்பிடிப்பின்போது, நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. அப்போது, உடனடி சிகிச்சைகளை மேற்கொண்டார்.ஆனால் கால் வலி முற்றிலுமாக சரியாகாத நிலையில் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார்.இதையடுத்து, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, அவருக்கு நரம்பியல் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

Post a Comment

 
Top