சென்ற வாரம் சமூக வலைத்தளங்களில் ஐ படத்திற்கு செம்ம காம்படிசனாக இருந்தது ஷங்கரின் சிஷ்யன் அட்லீயின் காதல் தான். அட்லீக்கும் சின்னத்திரை நடிகை ப்ரியாவிற்கும் காதல் என யாரோ கொழுத்தி போட. அட உண்மையாகவே நாங்கள் காதலர்கள் தாங்க என்று ஒரு ஸ்டில்லை இவர்களே நெட்டில் தட்டி விட, பின் சொல்லவா வேண்டும் இந்திய அளவில் இவர்கள் காதல் வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆனது.எப்படிப்பா... இது நடந்தது என அனைவரும் குப்புற படுத்து யோசிக்க, அவர்களே அந்த சிதம்பர ரகசியத்தை ஓபன் செய்துள்ளனர். இது குறித்து அட்லீ கூறுகையில் ‘எனக்கு சிவகார்த்திகேயன் மிகவும் நெருங்கிய நண்பர், அவரை வைத்து தான் என் முதல் குறும்படமான முகப்புத்தக்கதை இயக்கினேன். இதன் பிறகு எங்கள் நட்பு அதிகமானது.அவரை பார்க்க அடிக்கடி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிக்கு செல்வேன், அங்கு தான் முதன் முதலாக ப்ரியாவை சந்தித்தேன். 'முகப்புத்தகம்’னு ஷார்ட் பிலிமோட பிரீமியர் ஷோவுக்கு பிரியா அவங்க குடும்பத்தோட வந்திருந்தாங்க. என் குடும்பத்துல உள்ளவங்களும் வந்ததால, ரெண்டு பேரும் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். சொல்லபோனால் எங்கள் காதலுக்கு பிள்ளையார் சுழியே சிவகார்த்திகேயன் தான். அப்போதிலிருந்தே அவர் மீது எனக்கு ஒரு லவ் இருந்தது, பின் ஒரு நாள் ‘எனக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்க என்று ப்ரியா கூற, உடனே நான் என் போட்டோவை தரவா? என்று கேட்டேன். அவரும் சிரித்து கொண்டே வீட்டில் வந்து பேசுங்க என்று கூற பின் எல்லாம் சுபமே’ என்று தன் காதல் கதையை கூறியுள்ளார் அட்லீ.
சிவகார்த்திகேயனால் தான் நாங்கள் காதலர்கள் ஆனோம்! அட்லீ-ப்ரியா கலகல காதல் டாக்!

Post a Comment