கார்த்தி நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் மெட்ராஸ். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கேத்ரின் நடிக்க, ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கியுள்ளார்.தற்போது இப்படத்தை தடை செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்ததில் பாலசுப்ரமணியம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நான், ''கருப்பர்கள் நகரம்'' என்ற படத்தை எடுத்து வருகிறேன். இப்படம் பாதி முடிவடைந்துள்ளது. இதனிடையே கார்த்தி நடித்துள்ள மெட்ராஸ் படத்தின் கதை எனது கதையை போன்று உள்ளது. எனது கதையை திருடி மெட்ராஸ் படத்தை எடுத்துள்ளனர், இதனால் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.வழக்கை விசாரித்த நீதிபதி , அக்டோபர் 22ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கை ஒத்தி வைத்தார்.
கார்த்தியின் மெட்ராஸ் படத்திற்கு தடை!

Post a Comment