இளம் இசையமைப்பாளர்களில் தன் மெலடி பாடல்களால் எல்லோர் மனதையும் திருடியவர் ஜி.வி.பிரகாஷ். ஆனால் நடிப்பின் மீது கொண்ட ஆசையால் இசைக்கு கொஞ்ச நாட்கள் டாட்டா காட்டிவிட்டு, பென்சில் படத்தில் நடிக்க சென்றார்.ஆனால் அந்த படம் பாதியிலேயே நிற்கிறது, அதற்கு பின் ஆரம்பித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படமும் கிடப்பிலேயே இருக்கிறது.இதற்கிடையில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் டார்லிங் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே கதாநாயகிக்கும், இவருக்கும் ஈகோ ஆரம்பித்துவிட்டதாம். இப்படியே போனால் இந்த படமும் ட்ராப் தான் என படக்குழு இருவரையும் உட்கார வைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்களாம்.

Post a Comment

 
Top