Premji becomes a Car-Racer
கார் ரேசரான பிரேம்ஜி
பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இந்நிலையில்,
இவர் மேலும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். டக்கர் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ‘மதில்மேல் பூனை’ என்ற படத்தை இயக்கிய பரணி ஜெயபால் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு பிரேம்ஜி அமரனே இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரேம்ஜி, கார் பந்தயத்தில் கலந்துகொண்டு அதிகவேகமாக கார் ஓட்டும் வீரராக நடிக்கிறாராம். விஞ்ஞான ஆராய்ச்சியுடன், காமெடி, ஆக்ஷன், திரில் என பல பரிமாணங்களில் வளர்ந்து வரும் இப்படத்தில் பிரேம்ஜிக்கு ஜோடியாக மீனாட்சி தீட்சித்-அருந்ததி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
வி.டி.வி.கணேஷ், யோகி ஜெ.பி., ஜான் விஜய், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கின்றனர். கங்கை அமரனும், வெங்கட்பிரபுவும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் பாண்டியநாடு படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த சரத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சலீம் என்பவர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, பெங்களூரில் படப்பிடிப்பை முடித்து தற்போது அந்தமான் காடுகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் எஸ்.யுவராஜ் மற்றும் எல்.கே.எஸ்.மீடியா சார்பில் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
Post a Comment