தமிழ் சினிமாவில் எந்த ஒரு நல்ல படங்கள் வந்தாலும் அதை பார்த்துவிட்டு மனதார பாராட்டுபவர் சிம்பு. நாளை கத்தி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், அனிருத்தும் சிம்புவும் நண்பர்கள் என்பதால் கத்தி படத்தின் பாடல்களை சிம்புவிற்கு போட்டுக் காட்டியுள்ளார் அனிருத். அப்பாடல்களை கேட்ட சிம்பு, தனது டிவிட்டர் பக்கத்தில், கத்தி பாடல்கள் சூப்பராக வந்திருப்பதாகவும், அனிருத் பின்னியிருக்கிறார் என்றும் கூறியுள்ளார். அதோடு கத்தி டீமுக்கு என் வாழ்த்துக்கள் எனவும் ட்வீட் செய்திருக்கிறார்.

Post a Comment

 
Top