ஜிகர்தண்டா என்ற படத்தில் வில்லனாக நடித்து வெற்றியின் உச்சத்தில் இருப்பவர் பாபி சிம்ஹா. கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்த பாபி சிம்ஹாவுக்கு நடிகர் ஆகும் ஆசை வந்துவிட்டது.அந்த சந்தோஷத்தில் தான் ஐ படத்தின் இசை வெளியீட்டில் காம்பியரிங்கும் செய்தார். அந்த இசை வெளியீட்டில் அர்னால்ட் இவரால் தான் பாதியிலேயே கிளம்பிவிட்டார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.சரி அது ஒரு பக்கம் இருக்க, சிம்ஹாவுக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மரியான் படத்தை இயக்கிய பரத் பாலா தான் சிம்ஹாவை ஹீரோவாக நடிக்க வைக்க இருக்கிறார்.பரத் பாலா ஏ.ஆர். ரகுமானின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் என்பதால், இந்த படத்திற்கு இசையமைத்து தர ஒப்புக் கொண்டாராம் ரகுமான்.

Post a Comment

 
Top