ஆடுகளம் என்ற படத்தின் மூலம் வெள்ளாவி பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் டாப்ஸி. இப்படம் ஹிட் ஆனாலும் அதை தொடர்ந்து நல்ல படங்கள் கிடைக்காததால் தெலுங்கு, ஹிந்தி பக்கம் சென்றுவிட்டார்.இந்நிலையில் சமீபத்தில் இவரை பற்றி பல கிசுகிசுக்கள் வந்தது, குறிப்பாக இவர் உடலின் அந்தரங்க பகுதியில் குத்திய டாட்டூ ஒன்று பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.இது குறித்து ஒரு பேட்டியில் தமிழ் மீடியாக்களை மிகுந்த கோபத்துடன் திட்டியுள்ளார், இதில் ‘என்னை பற்றி கிசுகிசு எழுதுவதில் இவர்களுக்கு என்ன கிடைத்து விடப்போகிறது, என் திருமணம் சம்மந்தமாகவே செய்திகளை வெளியிட்டு வருகின்றனர், இதனால் என் பட வாய்ப்புகளுக்கு எந்த பாதிப்பும் வராது’ என்று கூறியுள்ளார்.




Post a Comment

 
Top