ஆஸி., கிரிக்கெட் வீரர் பிரட்லீ நடிக்கும் ”அன்இந்தியன்”

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ. களத்தில் இவரது ஆக்ரோஷமான பந்துவீச்சை கண்டு எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் கலங்கியது உண்டு. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர்
அடுத்தப்படியாக சினிமா பக்கம் தாவியுள்ளார். ஆமாம், இப்போது அவர் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.

ஆஸ்திரேலிய -இந்திய கூட்டு தயாரிப்பாக உருவாகும் ”அன்இந்தியன்” என்ற படத்தில் பிரட்லீ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் தனீஸ்தா சாட்டர்ஜி நடிக்கிறார். அனுபம் சர்மா இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் முதல் துவங்குகிறது.

ஆஸ்திரேலிய-இந்திய பிலிம் தயாரிக்கும் முதல்படத்தில் நான் நடிப்பது சந்தோஷமாகவும், கவுரமாகவும் இருக்கிறது. அனுபம் சர்மா மற்றும் தனீஸ்தா ஆகியோருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் பிரட் லீ.

தனீஸ்தா கூறுகையில், ஆஸ்திரேலியா எனக்கு எப்பவும் ஸ்பெஷல். இந்தப்படத்தில் நான் நடிப்பது சந்தோஷம், அதுவும் பிரட் லீ கூட நடிக்கிறேன், என்ன சொல்ல… என்கிறார்.

Post a Comment

 
Top