இளைய தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நாள் வந்து விட்டது. கத்தி படத்தின் பாடல்கள் அனிருத்தின் அதிரடி இசையில் இன்று வெளிவந்துள்ளது.படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வேறு வேறு தளத்தில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக செல்பி புள்ள பாடல் விஜய்யே பாடியதால் அப்பாடல் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான்.மேலும் ஹிப் ஆஃப் தமிழன் ஆதியுடன் அனிருத் பாடிய பாடல் ராப், ஃபோக் என்று அட்டகாசம் செய்கிறது. இந்த வருடத்தின் மாபெரும் ஹிட் ஆல்பம் வரிசையில் கண்டிப்பாக கத்தி இருக்கும்.

Post a Comment

 
Top