5,00,000 ஐ தாண்டிய சுந்தர் சியின் அரண்மனை

தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை அடுத்து சுந்தர் சி நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் அரண்மனை விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் பெரும் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின்
டிரைலர் பிரபல வீடியோ இணையதளம் ஒன்றில் 500,000 பேர் இதுவரை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகக்குறுகிய நாளில் எந்தவித பெரிய ஹீரோக்கள் நடிக்காத திரைப்படம் ஒன்று இவ்வளவு அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது இதுதான் முதல்முறை.

சுந்தர் சி, ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய்லட்சுமி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசையை பரத்வாஜ் அமைத்துள்ளார். தினேஷ் கார்த்திக் தயாரிப்பில், ஸ்ரீகாந்த் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முரட்டுக்காளை படத்திற்கு பின்னர் இரண்டு வருடம் கழித்து சுந்தர் சி மீண்டும் நடிக்கத்தொடங்கியது மட்டுமின்றி இதுவரை காமெடியை மையமாக வைத்தே இயக்கி வந்த அவர், முதன்முதலாக சஸ்பென்ஸ் மற்றும் த்ரில் திரைக்கதையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அவர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதும் இந்த படத்தின் சிறப்பு.

Post a Comment

 
Top