சித்தார்த் ஒரு பைத்தியம்: சமந்தா

கன்னட மொழியில் சூப்பர் ஹிட் ஆன லூசியா திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான 'எனக்குள் ஒருவன்' திரைப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில்
சித்தார்த்த், தீபா சந்நிதி, சமந்தா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய சித்தார்த், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானே நமது இசையமைபாளர் சந்தோஷ் நாராயணனை பாராட்டியுள்ளார். அவரிடம் பாராட்டு வாங்குவது என்பது பெரிய விஷயம். அதேபோல் ஜிகர்தண்டா படத்திற்கு பின்னர் மீண்டும் அவருடன் பணிபுரிந்தது எனக்கு பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும். இந்த படத்தில் பின்னணி இசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து மிக அபாரமாக சந்தோஷ் இசையமைத்துள்ளார் என்று கூறினார்.

மேலும் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த சமந்தா பேசும்போது, 'சித்தார்த் ஒரு சினிமா பைத்தியம். ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால் அந்த படத்தின் கேரக்டராகவே மாறி முற்றிலும் அந்த கேரக்டரிலேயே மூழ்கிவிடுவார். அவருடைய உழைப்பு கண்டிப்பாக இந்த படத்தை பெரிய அளவில் வெற்றி பெற வைக்கும் என்று கூறினார்.

Post a Comment

 
Top